முகவரி குறிப்பிடப்படாத நிலையில் இணையத்தின் வாயிலாக தரமற்ற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த பெண் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து கொஸ்வத்தையில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த பெண் வசித்த வந்த வீட்டிலிருந்து ஆயிரம் சிறிய போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.