ரயில் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

ரயில் கட்டணத்தை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் தெரிவித்ததாவது,

பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும் வகையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதற்கான கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக மாற்ற தேவையான சட்டங்களை திருத்த வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply