இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகமாகும் பாலியல் பாடம்

மாணவர்கள் மீது அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளை குறைக்கும் வகையில், மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சுகாதார கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்திருப்பதாகக் களுத்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்மானித்த பின்னர், 15-18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அந்தத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் விசேட பிரதிநிதிகளுடன் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த விடயம் தொடர்பில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply