தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்த் மற்றும் இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்தில் இவ் வாரம் இடம்பெற்றதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறும் அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
மேலும்,இலங்கைக்கான பயணத்தின் போது, பிரத்தியேகமான ராமாயண பாதை மற்றும் இலங்கையில் உள்ள பிற தனித்துவமான பௌத்த தலங்களை ஆராய வேண்டும் எனவும் பிரதி உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தார்.