போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் நிறைவேற்று தர கணக்காய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வெல்லவ பிரதேசத்தில் போலி ஆயிரம் ரூபா நாணயத்தாளை வழங்கி வர்த்தக நிலையமொன்றில் பொருட்களைக் கொள்வனவு செய்ய முற்பட்ட வேளையில்
வர்த்தகருக்கு சந்தேகம் ஏற்பட்டவே அவர் காவல்துறையினரிடம் முறைப்பாடளித்துள்ளார்.
அதற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வசிக்கும் கும்புக்வெவ சிங்கராஜா பிரதேசத்தில் உள்ள வீட்டை காவல்துறையினர் சோதனையிட்ட போது மேலும் பல போலி நாணயத்தாள்களை அவர்கள் கைப்பற்றி உள்ளனர்.
வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத்தினுடைய தலைமையில் வெல்லவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்