யாழில் போலி உறுதிக்கு கையெழுத்திட்ட நொத்தாரிசு கைது

போலியாக தயாரிக்கப்பட்ட காணி உறுதி ஒன்றுக்கு கையெழுத்திட்டதை அடுத்து யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணியை ஏமாற்றி விற்பனை செய்வதற்காகப் போலியான கையெழுத்திட்டு உறுதி தயாரித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாந்த தலைமையிலான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு கொடிகாமம் இத்தாவில் பகுதியில் உள்ள காணியொன்றை விற்பனை செய்வதற்காக போலியான கையெழுத்திட்டு உறுதி தயாரித்த குற்றச்சாட்டிலேயே இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

காணியை ஏமாற்றி விற்பனை செய்தவர்களையும் விரைவில் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply