ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தாய்லாந்தின் பாங்காக் நகரைச் சென்றடைந்துள்ளார்.
பிரதமர் தலைமையிலான 11 பேர் கொண்ட இலங்கைத் தூதுக்குழு இன்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தினூடாக தாய்லாந்து புறப்பட்டனர்.
தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம், ஏனைய அதிகாரிகள் மற்றும் இலங்கைத் தூதுவர் சமிந்த கொலொன்னே ஆகியோர் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
T01