விவசாயத்துறைத் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

இலங்கையின் விவசாயத்துறையின் தரவுகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடலானது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பில், மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகளுக்கிடையேயும் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

விவசாயத்துறையை நவீனமயமாக்குவதற்கும் போசாக்கை மேம்படுத்துவதற்கும் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கும் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி விக்கிரமசிங்க குறித்த கலந்துரையாடலில் வலியுறுத்தினார்.

இதன்போது, பில், மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் அதிகாரிகள், நிதி உதவி மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் தம்முடன் ஒத்துப்போனால், இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்குத் தாம் தயாராக உள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், காலநிலை மாற்றத்திற்கான பல்கலைக்கழகத்தை நிறுவுவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply