ஜனாதிபதி – சர்வதேச நாணய நிதிய பிரதிப் பணிப்பாளர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுராவிற்கும் (Kenji Okamura) இடையிலான சந்திப்பொன்று நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தற்போது நடைபெற்று வரும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்தும் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏன் மேரி குல்தி (Anne Marie Gulde), சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி சர்வத் ஜஹான்(Sarwat Jahan) ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply