சதோசவில் அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

சதோசவில் இன்று முதல் நடைமுறைக்குவரும் வகையில் ஆறு உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கபட்டுள்ளன.

அதன்படி, கோதுமை மா, சிவப்பு பருப்பு, பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, கடலை, வெள்ளை நாட்டு அரிசி ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒரு கிலோ கோதுமை மா 15 ரூபாவால் விலை குறைப்புச் செய்யப்பட்டு 210 ரூபாவாகவும், ஒரு கிலோ சிவப்பு பருப்பு 11 ரூபாவால் விலை குறைப்புச் செய்யப்பட்டு 314 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 14 ரூபாவால் விலை குறைப்புச் செய்யப்பட்டு 115 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளைச் சீனி 10 ரூபாவால் விலை குறைப்புச் செய்யப்பட்டு 229 ரூபாவாகவும், ஒரு கிலோ கடலை 5 ரூபாவால் விலை குறைப்புச் செய்யப்பட்டு 545 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை நாட்டு அரசி 4 ரூபாவால் விலை குறைப்புச் செய்யப்பட்டு 175 ரூபாவாகவும் விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply