விமானப்படை பட்டமளிப்பு விழாவில் தடுமாறி விழுந்த ஜோ பைடன்

அமெரிக்காவின் விமானப்படை அக்கடமியில்  நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தவறுதலாகக் கீழே விழுந்துள்ளார்.

இதனை அடுத்து அங்கு இருந்த அதிகாரிகள் அவரை கைத் தாங்கலாகத் தூக்கி இருக்கையில் அமர்த்தினர்.

விழா மேடையில், விமானப்படையில்  தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு, இருக்கைக்கு திரும்பும்போது, அருகிலிருந்த மணல் மூட்டை தடுக்கியதாலே, அவர் தடுக்கி விழுந்துள்ளார் எனவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply