உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.
இதனை முன்னிட்டு, சண்டிலிப்பாய் பிரதேசசபையின் ஏற்பாட்டில் குறித்த பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை வீதி நாடக நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வீதி நாடகமானது, முறையற்ற பிளாஸ்டிக் பாவனையின் ஊடாக ஏற்படுகின்ற சூழல் மாசடைவைத் தடுப்போம் என்னும் தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மரங்களை வளர்ப்பதன் அவசியம் தொடர்பிலும், இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் தொடர்பிலும், நீரைச் சேகரிப்பதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.