கடும் மழை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் சேதம்

களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பல வீதிகள், பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

இதனால் கா.பொ.த சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்களும், பரீட்சை கண்காணிப்பாளர்களும் உரிய நேரத்திற்கு பரீட்சை மண்டபத்திற்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, சிறப்புப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு  அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், புளத்சிங்கள கல்வி வலயத்திற்குட்பட்ட கூடலிகம மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படையினர் நடவடிக்கையில் இறங்கியுள்ளதோடு, கா.பொ.த சாதாரண பரீட்சார்த்திகளை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கு படகு சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவசரநிலைமைகளின்போது, 117 என்ற அனர்த்த முகாமைத்துவ நிலைய தொலைபேசி இலக்கத்தினைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply