கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறை – கிழக்கு ஆளுநருடன் எம்.எஸ்.தௌபீக் முக்கிய கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும்  திருகோணமலை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் ஆகியோருக்கிடையில், சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்றைய தினம் கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயம் சௌமிய பவனில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றக்கூடிய ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விடயம் எனவும், அவரை மக்கள் முழுமையாக ஆதரிப்பதாவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் தெரிவித்ததோடு, புதிய ஆளுநராக பதவியேற்றுக்கொண்டமைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதன் போது, கிழக்கு மாகாண அபிவிருத்தி, பிரச்சினைகள் தொடர்பில்  கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேவேளை, கிழக்கு மாகாண அபிவிருத்தி, ஆசிரியர் பற்றாக்குறை, காணிப் பிரச்சினை, வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பகவும்  கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின் போது, அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply