இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று டொலரின் பெறுமதி அதிகரித்து காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியாகியுள்ளது.
அதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 284.17 முதல் ரூ. 283.20 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 299.45 முதல் ரூ. 298.42 ஆகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 283.83 முதல் ரூ. 282.02 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 298 முதல் ரூ. 297 ஆகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி விற்பனை பெறுமதி என்பன மாற்றமடையாது ரூ. 285 மற்றும் ரூ. 297 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.