முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் உற்சவத்துக்குச் சென்று விட்டு, யாழ்ப்பாணம் திரும்பிக்கெணடிருந்த இளைஞன் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தென்மராட்சி, வரணிப் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையைச் சேர்ந்த குணசெல்வம் நிகர்ஷன் என்னும் 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இளைஞரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.