டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 300 மில்லியன் பெறுமதியான பொருட்கள் கொண்ட கொள்கலனை இலங்கை சுங்கப் பிரிவினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதன்படி, 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள், மூன்று வாகனங்கள் பொருத்துவதற்கான உதிரிபாகங்கள், மதுப் போத்தல்கள் மற்றும் சிகரெட்டுகள் என்பனவே கைப்பற்றப்பட்ட கொள்கலனுக்குள் காணப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.