நகைச்சுவை நடிகர் நடாசா எதிரிசூரிய மற்றும் SL VLOG யூடியூப் தளத்தின் உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் மாதம் 21 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஒரு முன்னணி பள்ளி ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியில், பல மதங்களை அவமதித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக எதிரிசூரியமீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு இவர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பான கானொளி, SL VLOG என்ற யூடியூப் தளத்திலேயே முதலில் வெளியிடப்பட்டதால் யூடியூப் தளத்தின் உரிமையாளர் திவாகர மே மாதம் 31ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.
இதற்கிடையில், எதிரிசூரிய மே மாதம் 28 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
T02