உடைந்த கண்ணாடிப் போத்தலின் துண்டுகளால் வெட்டுக் காயங்களுக்கு உள்ளானதாக நம்பப்படும் சிறுவனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
முல்லேரியாவில் கட்டுமாணப் பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பகுதியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து, முல்லேரியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டதோடு, அது தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
சடலமாக மீடகப்பட்ட குறித்த சிறுவன், முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் வசிக்கும் 5 வயதுச் சிறுவன் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், உடைந்த கண்ணாடி போத்தல் துண்டுகளால் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதில் அதிக இரத்தப்போக்குக் காரணமாக சிறுவன் உயிரிழந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவனின் தாயார், கணவனைப் பிரிந்து வாழும் நிலையில், வேலைக்காக சென்றதையடுத்து, பகல் நேரத்தில் அவரின் தாத்தா, பாட்டி கவனித்துக் கொண்டனர்.
சம்பவத்தையடுத்து, குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லேரியாவில் உள்ள தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.