யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள், கல்வியியலாளர்கள் சமூக ஆர்வலர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலானது, தரம் ஒன்று முதல் தரம் ஒன்பது வரையான மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவதை இடைநிறுத்தல் தொடர்பில் இடம்பெற்றிருந்தது.
அதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல், ஞாயிற்றுக்கிழமைகளில், தரம் ஒன்று முதல் ஒன்பது வரையான மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த தீர்மானங்களை பின்பற்றாத தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என யாழ் மாவட்ட செயலாளர் அ.சிவபால சுந்தரன் தெரிவித்துள்ளார்.
மாணவர் மத்தியில் ஆன்மீகத்தை வளர்க்கும் நோக்குடனேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.