ஆப்கானிஸ்தானில் – பதாக்ஷான் மாகாணத்தின் பைஸாபாத் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினால், நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துடன் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தவாரம் படுகொலை செய்யப்பட்ட மாகாண பதில் ஆளுநர் நிசார் அஹ்மத் அஹ்மதியின் இறுதிச் சடங்கின்போதே குறித்த குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில், தலிபான் அதிகாரிகளும், பாக்லான் மாகாணத்தின் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரும் அடங்குவதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.