இனவெறியர்களை பேச்சாளர்களாக வைத்துக்கொண்டு நாட்டில் இனநல்லிணக்கத்தை உருவாக்க முடியுமா என தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கடந்த 5 ஆம் திகதி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புலனாய்வாளர்களால் ஆயுதமுனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரிடம் எந்தவித வாக்குமூலமோ அல்லது அறிக்கையோ இது வரை பெற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் பொலிஸ் பேச்சாளர் எவ்வாறு ஒரு உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிட்டார்?
இதன் மூலம் சிங்கள சமூகத்தின் மத்தியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிரான பொய்யான கருத்துக்கள் பரவ எவ்வாறு வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆகவே இவ்வாறான இனவெறியர்களை, பேச்சாளர்களை வைத்துக்கொண்டு எவ்வாறு இனநல்லிணக்கத்தை ஏற்படுத்துவது” எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.