வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் தொற்று நோய்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது என தொிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்கள் வவுனியா மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.