கடந்த மே மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்பல்கள் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
எனவே இவ்வருடத்தின் கடந்த மே மாதம் வரையிலான பண அனுப்பல்கள் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.