டொலர் 350 ஆக இருப்பதை விட 300 ஆக இருக்கும் போது வாழ்வதே மிக கடினம்!

டொலர் 350 ஆக இருப்பதை விட 300 ஆக இருக்கும் போது வாழ்வதே மிக கடினம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தேசிய மக்கள் சக்தியின் பொது கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” டொலரின் விலை வீழ்ச்சியடைந்தாலும் பொருட்களின் விலை வீழ்ச்சியடையாது, ஏனெனில் டொலரின் வீழ்ச்சியானது பொருளாதாரச் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் விளைவு அல்ல.

பொருளாதாரம் சுருங்குவதால் வாங்கும் சக்தி குறைவதாகவும், தேவை குறையும் போது, ​​பணவீக்கம் தானாக குறைவதுடன், இறக்குமதி செலவும் குறையும்.

வெளிநாட்டுக் கடனை செலுத்துவதற்கும், கடனை செலுத்துவதற்கும் இறக்குமதி செய்வதற்கும் டொலரை செலவிடாததாலும், டொலருக்கான தேவை குறைந்துள்ளதாலும் அண்மைய நாட்களில் இயற்கைக்கு மாறான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது “, எனக் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply