சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் இன்று இந்த சத்தியப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக கடமையாற்றிய டிகிாி கொப்பேகடுவ அண்மையில் பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு நவின் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதேவேளை கடந்த மாதம், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா, வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் ஆகியோர் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.