ஊடக சுதந்திரத்தை நசுக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை அனுமதிக்க முடியாது!

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டு மக்களின் தகவல்களை அறியும் உரிமையை அழிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை நசுக்கும் வகையில் அரசாங்கம் கொண்டு வர திட்டமிட்டுள்ள சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தகவல்களை ஊடகங்கள் மூலம் பரப்புவது அந்த நிறுவனங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்

மேலும்  ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

நாட்டில் தேர்தல்களை பிற்போடுவதன் மூலம் ஊடகங்களை அடக்கி ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் நோக்கில் செயற்பட்டு வருகின்றார் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply