பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடைபெறவிருக்கும் உயர்மட்டக் குழுக் கலந்துரையாடலில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய நிதி ஒப்பந்தத்திற்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாடு இம்மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பிரான்ஸ் பரிஸில் நடைபெற உள்ளது.
புதிய உலகளாவிய நிதிக்கான உச்சிமாநாடு, ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடுவதற்கும், காலநிலை மாற்றத்திற்கு நிதியளிப்பதையும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதையும், நாடுகளை நெருக்கமாகக் கொண்டு வருவததையும், மற்றும் சர்வதேச நிதி அமைப்புக்கான புதிய ஒருமித்த கருத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில் மாநில மற்றும் அரசாங்கத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள், நிதி மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தத்தக்கது.
T02