லங்கா சதொச நிறுவனம் இன்று(15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, 195 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் விலை, 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, 295 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும், ஒரு கிலோ கிராம் கடலை பருப்பின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, 275 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.