காங்கேசன்துறையை வந்தடைந்தது சென்னை பயணிகள் கப்பல்!

சென்னை – யாழ்ப்பாணம் இடையேயான பரீட்சார்த்த கப்பல் சேவை இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

அதற்கமைய சென்னையிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா கப்பல் ஒன்று இன்றைய தினம் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்ட கப்பல் இன்று காலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

இவ்வாறு சுற்றுலா பயணிகளுடன் வந்த கப்பலை, விமான சேவைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறீபாலடி சில்வா வரவேற்றதோடு, கப்பலின் கப்டனுக்கு நினைவு பரிசிலும் வழங்கி வைத்தார்.

இலங்கை துறைமுக அதிகார சபையினால் 25 கோடி ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வாவினால் இன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா, யாழ் இந்தியத் துணைத் தூதுவர், கப்பல்துறை அமைச்சின் செயலாளர், துறைமுகங்கள் அதிகார சபையின் அதிகாரிகள், வட பிராந்திய கடற்படை தளபதி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், கடற்படை உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறீபாலடி சில்வா,

காங்கேசன்துறைக்கும் இராமேஸ்வரத்துக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவையினை ஆரம்பிப்பது தொடர்பாக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது.

இராமேஸ்வரம் பகுதியில் சில வேலைத்திட்டங்கள் கப்பல் சேவை ஆரம்பிப்பதற்கு முன்னர் முன்னெடுக்க வேண்டிய தேவையும் உள்ளது என்றும் இதன் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக கப்பல் சேவினை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் தொடர் முயற்சியின் பயனாக விரைவிலேயே இரு நாட்டுக்கும் இடையில் கப்பல் சேவை ஆரம்பிக்க கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply