இனவாதத்தை தூண்டும் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை!

திரியாய் விகாரையை சுற்றி தமிழ் மக்களின் வயல் காணிகள் இருப்பதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுமத்தும் குற்றச்சாட்டு பொய்யானது என பலாங்கொட காசியப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

திரியாய், குருந்தூர்மலை விகாரைகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

வடக்கில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் இனவாத்தை ஏற்படுத்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சாணக்கியன் கூறுவதைப் போன்று திரியாய் பிரதேசத்தில் வயல் காணிகள் எதுவுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆயிரக்கணக்கான வருட வரலாற்றுக்கு உரிமை கோரும் இந்த பிரதேசத்தில், கடந்த போர் காலத்தில் சிலர் காணிகளை கைப்பற்றி இருந்தாலும் பௌத்த வழிப்பாட்டு தலங்கள் இருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் அங்கு இருக்கின்றன.

அதேவேளை, அரச வளங்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

அத்துடன் பௌத்த சமயத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பாக மேலும் சிலருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் காசியப்ப தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply