கல்வித்துறை சேவைகளை டிஜிட்டல் மயமாக்க திட்டம்! கல்வி அமைச்சர் தகவல்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அரச மற்றும் ஏனைய சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தில் கல்வித்துறை சார்ந்த விடயங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரியர்களுக்கான மானியம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் தலைமையில் ஆசிரியர் நியமனங்கள் 8 மாகாணங்களுக்கு ஒரே நேரத்தில் நேற்றைய தினம் வழங்கப்பட்டது.

மேல் மாகாணம் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு மொத்தம் 2,355 ஆசிரியர் நியமனங்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply