உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வடிவம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இராஜதந்திர சமூகத்துடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் அதன் விடயங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான வரைவுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்தவுடன், டிசம்பருக்குள் அது செயற்பாட்டுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது வழக்கமான அமர்வுகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நடவடிக்கையை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து நாளைய தினம் வாய்மூல அறிக்கை ஒன்றை வழங்கவுள்ளார்.