இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை!

ஐ.நா. மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளரினால், இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை, ஐ.நா. மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் , குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.மனித உரிமை பேரவையின் 53வது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரிலேயே, எதிர்வரும் புதன்கிழமை, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் ஊழல், மோசடி என்பன மனித உரிமை விடயங்களில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் அன்றைய தினம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு வாய்மூலமாக அறிவிக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டெம்பரில் இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது, அmப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட், இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து கடும் கரிசனையை வெளியிட்டு அறிவிக்கை ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு 51/1 தீர்மானமும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply