பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 10 ரூபாவால் குறைப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், கோதுமை மாவின் விலை நிலைமை தொடர்பில் அவர் கூறுகையில், ” கோதுமை மாவின் விலை 430 ரூபாவாக காணப்பட்டது. தற்போது சந்தையில் 170, 160 ரூபாவாக காணப்படுகின்றது.
தட்டுப்பாடுகள், விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்காகவே கோதுமை மாவை அத்தியாவசிய பொருளாக அறிவித்துள்ளோம். எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை ஒருபோதும் அதிகரிக்கப்படாது என்ற உத்தரவின் காரணமாகவே பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்கலாம் ” எனக் குறிப்பிட்டார்.