ஹசரங்கவின் அசத்தலான பந்து வீச்சு! 175 ஓட்டங்களால் வெற்றி பெற்றது இலங்கை

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தகுதிகாண் போட்டிகள் நேற்று ஆரம்பமான நிலையில் இலங்கை அணி இன்று தனது முதலாவது போட்டியில் விளையாடியது.

ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக நடைபெறம் இந்த போட்டியில் மேல்வரிசை வீரர்களின் துடுப்பாட்டத்தாலும் ஹசரங்கவின் அசத்தலான பந்துவீச்சாலும் இலங்கை அணி 175 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி தலைவர் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 355 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அதிகபடியாக குசல் மெண்டிஸ் 78 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் அலி நசீர் 44 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு இராச்சிய அணி 356 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில், அதிகபடியாக மொஹம்மட் வசீம் 39 ஓட்டங்களையும், விர்த்தியா அரவிந்த் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 8 ஓவர்கள் வீசி 24 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 06 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply