இலங்கையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டின் அடுத்த ஜனாதிபதியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தீர்மானிக்கும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, நாட்டில் மீண்டும் வன்முறையான கலாசரத்தை உருவாக்கும் நோக்குடனேயே கடந்த காலங்களில் செயற்பட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தங்களின் கருத்துக்கு இணங்காத நபர்கள் மீது தாக்குதல் நடத்துவது, நடுவீதியில் வைத்து கொலை செய்வது போன்ற மோசமான கலாசாரத்தை ஏற்படுத்த முற்பட்டார்கள் எனவும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
மேலும் தமது கட்சியின் உறுப்பினர்கள் மீது இனிமேலும் தாக்குதல் நடத்த இடமளிக்க போவதில்லை என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.