பலாலி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply