முதல் காலாண்டில் நாட்டில் எச்.ஐ.வி(HIV) தொற்று 13 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” நாங்கள் வரவு செலவு அலுவலகம் பற்றி பேசுகிறோம், மறுபுறம், எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளது
இந்நிலைமை நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதால் இது தொடர்பில் அவதானிக்க வேண்டும் ” எனக் குறிப்பிட்டார்.