உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகள், போதைப்பொருள் பாவனைகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தகவல்களை வழங்க பொலிஸ் தலைமையகம் புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிவித்துள்ளது.
அதன்படி, “1997” என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு குறித்த குற்றங்கள் தொடர்பில் அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் மாத்திரமே குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொள்கிறது.