நாட்டில் பொது அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் நிலைநிறுத்தமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்ற அமர்வில் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.
இந்த நிலையிலேயே குறித்த உத்தரவு தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பை சபாநாயகர் நாடாளுமன்றில் சமர்பித்தார்.
நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.