இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாசாரம் நிலவும் வரை உண்மையான நல்லிணக்கமோ நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீப் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையிலேயே நேற்று அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் இலங்கை மக்களின் உரிமை மற்றும் நலன்களின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பொருளாதார சீர்திருத்தத்தின் சுமைகள் சமத்துவம் இன்மைகளை மேலும் அதிகரிக்காமலிருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் மிகவும் நலிந்த மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வலையமைப்புகள் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்
துரதிஸ்டவசமாக மிகவும் ஆபத்தான சட்டங்கள் எதிரணியினரை கட்டுப்படுத்துவதற்கும் சிவில் சமூகத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கும் பயன்படுத்தப்படுவதை கடந்த மாதங்களில் பார்க்கமுடிந்துள்ளதாகவும் ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீப் தெரிவித்துள்ளார்.