தனது பதவி விலகல் தொடர்பில் அறிவிப்பு விடுத்துள்ள கெஹலிய!

மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டிற்கு சரியான தீர்வு வழங்கவில்லையெனில் பதவி விலகப் போவதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை சரி செய்ய நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் முறையான தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலகப் போவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாட்டில் மருந்து பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மருந்து பொருட்களை நாட்டிற்கு கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பாக 9 மாதங்களாக பெறுகை கோரல் தொடர்பில் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

அதனை குறைத்துக்கொள்ள அமைச்சரவைக்கும் பல சந்தர்ப்பங்களில் சென்றோம். அமைச்சரவையும் அதற்கு அனுமதி வழங்கி இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கிடையில் ஒருசில குழுவினர் இவ்வாறு மருந்து பொருட்கள் கொண்டுவருவதை நிறுத்துமாறு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதனால் எமக்கு பாதிப்பு ஏற்பட்டது.

சுகாதாரத்துறை தொடர்பாக நீதிமன்றத்தின் சில தீர்ப்பு எமக்கு பாதகமாக அமைந்திருக்கிறது.

இது தொடர்பாக நீதி அமைச்சருக்கும் தமது கவலையை தெரிவித்திருப்பதாகவும், மருந்து தட்டுப்பாட்டுக்கு இதுவும் ஒரு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த விடயம் நிதி தொடர்பாகவும் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. சுகாதார துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே தாங்கள் கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் இதுதொடர்பாக இன்று பதில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அந்த கலந்துரையாடலில் தமக்கு சரியான முடிவு கிடைக்காவிட்டால் அது தொடர்பாக இந்த சபைக்கு அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில், நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது அதற்கு பதில் சொல்லவேண்டும்.

அதனால் நிதி அமைச்சில் இடம்பெற்றும் கலந்துரையாடலின் மூலம் மருந்துபொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை சரி செய்துகொள்ள முடியாமல் போனால் தொடர்ந்தும் இந்த பதவியில் இருப்பதற்கு எதிர்பார்க்க மாட்டேன்.

ஏனெனில் இது சமுதாயத்திற்கும் இந்த சேவைக்கும் ஒரு பெரிய குறைபாடு. காரணங்கள் எதுவாக இருந்தாலும், அந்த குறைபாடுகளுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply