மட்டக்களப்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் கூரை திடீரென உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு கரடியனாறு வைத்தியசாலையில் நேற்றைய தினம் அவசர சிகிச்சை பிரிவு அறையின் கூரை உடைந்து வீழ்ந்துள்ளது.
சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் இந்த விபத்திலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
வைத்தியசாலையின் கூரை மேல் குரங்கு பாய்ந்தமையாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
உடைந்து விழுந்த கூரை அண்மையிலேயே புதிதாக அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே புதிதாக கட்டிய வைத்தியசாலையின் கூரை, குரங்கு பாய்ந்து உடைந்து விழும் அளவுக்கு தரமில்லாத வகையிலா நிர்மாணிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் எடுக்கு வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தில் இது போல் தரமின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளை ஆராய்ந்து அவற்றை திருத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.