டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்றவர்கள் இறந்துவிட்டனர்

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன Ocean Gate Titan நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஐவரும் நீருக்கடியில் வெடித்துச் சிதறிய பேரழிவு சம்பவத்தில் இறந்துவிட்டதாக அமெரிக்கா கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி பலநாட்களாக தொடர்ந்து வந்த தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளது.

காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த கப்பல்கள், விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி வாகனங்கள் போன்றவை பணியமர்த்தப்பட்டு, தேடுதல் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply