உக்ரைன் – ரஷ்ய போர் இவ்வாறே முடியும் – கனடாவின் கணிப்பு!

உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் இராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

எனினும் உக்ரைனில் மீளவும் முரண்பாடுகள் ஏற்படாது இருப்பதனை தடுப்பதற்கு நீண்ட காலத்திற்கு கனடா உதவி செய்ய நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் ஆரம்பமாகி பதினெட்டு மாதங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, உக்ரைனுக்கு நீண்ட கால அடிப்படையில் கனடாவும் நேட்டோ கூட்டுப் படையும் ஆதரவு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு பாதுகாப்பு வழங்குவதாக நீண்ட கால அடிப்படையில் உறுதி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய போர்களைப் போலவே இந்த போரும் சமாதான பேச்சு வார்த்தைகளின் ஊடாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை மேசையில் உக்ரைன் வலுவான நிலையில் இருக்க வேண்டும் எனவும் அதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply