தாய்லாந்தில் தீ பாதுகாப்பு ஒத்திகையின் போது தீயணைப்புக் கருவி வெடித்துச் சிதறியதில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பாடசாலை ஒன்றில் பல தீயணைப்புக் கருவிகளை வெயிலில் நிறுத்தி வைத்து, தீயணைப்புக் கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது? என்பது குறித்த விளக்கம் காட்டப்பட்டது.
இதன்போது ஒரு தீயணைப்புக் கருவி திடீரென வெடித்துச் சிதறியதில், அருகில் நின்று கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் 30 அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டு உடல் சிதைந்து உயிரிழந்துள்ளார்.
மேலும் 10 பேர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில், வாயு நிரப்பப்பட்ட தீயணைக்கும் சிலிண்டர் அதிக நேரம் சூரிய வெப்பத்தில் இருந்ததால் அழுத்தம் அதிகரித்து வெடித்துச் சிதறியதாகத் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.