ஓமான் அணிக்கு எதிராக நேற்றைய தினம் இடம்பெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி ஹசரங்கவின் துல்லியமான பந்து வீச்சால் 10 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 30.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
ஓமான் அணி சார்பாக அதிக ஓட்டங்களாக 41 ஓட்டங்களை அஜான் ஹான் பெற்றார்.
இலங்கை அணி சார்பாக துல்லியமாக பந்து வீசிய வனிந்து ஹசரங்க 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 7.2 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
பின்னா் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15 ஓவா்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 61 ஓட்டங்களையும் பெத்தும் நிஸாங்க 37 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனா்.