இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்!

எல்லை கடந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 பேரை, இலங்கை கடற்படை கைது செய்தமையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி காலை ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து 405 விசைப்படகுகளில் 1600கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளதை அடுத்து அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது , அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 4 விசைப்படகுகளையும் 22 மீனவர்களையும் சிறைபிடித்து யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடற்படையின் குறித்த கைது நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்களை படகுடன் உடனடியாக விடுவிக்க கோரியும் மண்டபம் கோயில் வாடி வடக்கு மற்றும் தெற்கு மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply