தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் 2022 ஆம் ஆண்டு இறுதி வரையில், குறித்த 51 வாகனங்களும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான ஏனைய 53 வாகனங்களும், ஏனைய அரச நிறுவனங்களுக்கும், ஆலயங்களுக்கும் , மதத் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த வாகனங்களில் , 27 வாகனங்களின் பராமரிப்புச் செலவிற்காக 2022 ஆம் ஆண்டு மட்டுமே 137 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் செலவுகள் திருப்பிச் செலுத்தப்படவில்லை எனவும் தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
T02